உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழுதைகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் அவதி

கழுதைகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் அவதி

மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையம் - - ஊட்டி சாலையில் சுற்றி திரியும் கழுதைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கழுதைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. சாலையில் சுற்றி திரியும் கழுதைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கழுதைகளால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் மட்டும் அல்ல, சாலையில் நடந்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். கழுதைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் கடும் அபராதம் விதிக்க வேண்டும், என்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை