உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரையாடு தின ஓவியம், ஸ்லோகன் போட்டி; படைப்புகளை 4ம் தேதி வரை அனுப்பலாம்

வரையாடு தின ஓவியம், ஸ்லோகன் போட்டி; படைப்புகளை 4ம் தேதி வரை அனுப்பலாம்

பொள்ளாச்சி : நீலகிரி வரையாடு தினத்தையொட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.நீலகிரி வரையாடு திட்டம் சார்பில், வரையாடு தினத்தையொட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே ஓவியம், ஸ்லோகன் எழுதும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கல்லுாரி மாணவர்கள் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.'நீலகிரி வரையாடு மற்றும் அதன் வாழ்விடம்' என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியாளர்களால் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட வேண்டும்; ஓவியம் கருமை அல்லது வண்ண ஓவியங்களாக இருக்கலாம். ஓவியம் உண்மையானதாகவும், வேறு எங்கும் வெளியிடப்படாததாக இருத்தல் வேண்டும். ஓவியப்போட்டிக்கான தலைப்பில் கருத்தினை பிரதிபலிக்க வேண்டும்.'நீலகிரி வரையாடுகளின் சூழலியல் முக்கியத்துவம், விதிமுறைகள் குறித்து, 'ஸ்லோகன்' எழுதுதல் போட்டி நடத்தப்படுகிறது. வரையாடுகள் வாழ்வியல் சம்பந்தமாகவும், தமிழ் மொழியில் மட்டுமே எழுத வேண்டும். தங்களது சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.ஓவியம் மற்றும் ஸ்லோகன் ஆகியவை வரும்,4ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். gmail.comஎன்ற மெயிலுக்கு அனுப்பலாம். இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.வெற்றி பெற்று தெரிவிக்கப்படுகின்ற முதல் மூன்று போட்டியாளர்கள் வரைந்த அசல் ஓவியங்களை திட்ட இயக்குனர், நீலகிரி வரையாடு திட்டம் கோவை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதுபற்றி, கல்வித்துறை அதிகாரிகள் வாயிலாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, நீலகிரி திட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை