உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாதம் ஒரு முறையே குடிநீர் வினியோகம்: சொக்கனுார் மக்கள் அதிருப்தி

 மாதம் ஒரு முறையே குடிநீர் வினியோகம்: சொக்கனுார் மக்கள் அதிருப்தி

கிணத்துக்கடவு: சொக்கனூர் ஊராட்சியில், சொக்கனூர், சட்டக்கல்புதூர், வீரப்பகவுண்டனூர், கோவிந்தநாயக்கனூர், ரங்கேகவுண்டன்புதூர், பாலர்பதி, முத்துக்கவுண்டனூர், பழனிக்கவுண்டனூர் ஆகிய கிராமங்கள் உள்ளது. இங்கு, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த, எட்டு கிராமங்களிலும் சேர்த்து, 17 மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் உள்ளன. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் கடைக்கோடி ஊராட்சியாகவும், மேடான பகுதியில் இருப்பதாலும், இப்பகுதி மக்களுக்கு மாதம் ஒருமுறை மட்டுமே ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வாயி லாக கல்லுக்குழி நீருந்து நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், மாதம் ஒரு முறை, 1,400 லிட்டர் அளவில் மட்டும் குடிநீர் வழங்கப்படுவதால் சொக்கனூர் பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் வழுக்குப்பாறை ஊராட்சியில் உள்ள கண்ணமநாயக்கனூர் பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர். சிலர் விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, சொக்கனூர் ஊராட்சிக்கு வழங்கும் குடிநீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர். மக்கள் கூறியதாவது: சொக்கனூரில் மக்கள் தொகை அதிகம் உள்ளது. அரசு சார்பில் குறைந்தபட்சமாக ஒரு நபருக்கு 40 முதல் 55 லிட்டர் வரை குடிநீர் வழங்க வேண்டும். ஆனால், ஒரு மாதத்திற்கு, எட்டு கிராமங்களுக்கும் சேர்த்து 1,400 லிட்டர் குடிநீர் வழங்குவதால் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. எனவே, சொக்கனூரில் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் வழங்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி