உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில் இறப்பு ஏற்படுத்திய டிரைவர் கைது

விபத்தில் இறப்பு ஏற்படுத்திய டிரைவர் கைது

அன்னுார்; வடக்கலூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம், 63. இவர் கடந்த 10ம் தேதி வடக்கலூரில் ஓதிமலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த லாரி ஆறுமுகம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் அதே இடத்தில் இறந்தார். அன்னுார் போலீசார் 'சிசி' டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதைதொடர்ந்து விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை சேர்ந்த கார்த்தி குமார், 36. என்பவரை கைது செய்தனர். இவர் லாரி ஓட்டி சென்று ஆறுமுகம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ