உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரோட்டில் சிதறிய ஜல்லிக்கற்கள்; வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு

 ரோட்டில் சிதறிய ஜல்லிக்கற்கள்; வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், கல்குவாரிகள் செயல்படுகின்றன. இங்கிருந்து, அதிகளவு கனிமவளங்கள், கேரள மாநிலத்துக்குகொண்டு செல்லப்படுகின்றன. அதில், அதிக பாரம் மற்றும் முறையான அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் எடுத்துச் செல்வதாக தொடர் புகார்களும் எழுகின்றன. அவ்வப்போது, கனிமவளத்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுத்தாலும், விதிமீறல் தொடர்கிறது. அதில், தார்ப்பாய் மூடாமல் ஜல்லிக்கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளால், பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டும் வருகிறது. நகரில், ஆங்காங்கே உள்ள திருப்பங்களில், லாரிகள் வேகமாக செல்லும் போது, ஜல்லிக்கற்கள், ரோட்டில் சிதறி விழுகின்றன. பின்னால் செல்லும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர், நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். நேற்று காலையும், அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரவுண்டானா ரோட்டில், ஜல்லிக் கற்கள் சிதறிக்கிடந்தது. இதையடுத்து, கவுன்சிலர் சாந்தலிங்கம் தலைமையிலான நகராட்சி பணியாளர்கள், ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூறுகையில், 'போக்குவரத்து போலீசார் கண்காணித்து, ஜல்லிக்கற்கள் ஏற்றி செல்லும் லாரிகளில், தார்ப்பாய் கொண்டு மூட அறிவுறுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ