‛டியூகாஸ்ல் தரமான நாற்றுகள்; மக்கள் பயன்படுத்த அழைப்பு
கோவை; 'டியூகாஸ்'ல் உள்ள நர்சரியில், தரமாக, குறைந்த விலைக்கு நாற்றுகள் விற்பனைக்கு உள்ளதால், பொதுமக்கள், சுப காரியங்களுக்கு வழங்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் (டியூகாஸ்), கடந்த டிச., 13ம் தேதி நர்சரி அமைக்கப்பட்டது. அலங்கார செடிகள், பூச்செடிகள், பழ மரக்கன்றுகள், மரக்கன்றுகள், மூலிகை நாற்றுகள் வைக்கப்பட்டுள்ளன.இந்நாற்றுகள், கல்லாறு பழப்பண்ணை, வனக்கல்லுாரி, குறைவான விலைப்புள்ளி வழங்கும் தனியார் நர்சரிகளில் பெற்று, தரமாக, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.கோவை மாவட்டத்தில் நடக்கக் கூடிய சுப நிகழ்ச்சிகளில், பங்கேற்கும் பொதுமக்களுக்கு, நாற்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதுபோல், வீட்டு விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு மரக்கன்றுகள் வழங்க தேவைப்படுவோர், துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தை அணுகலாம்.தொடர்புக்கு: 94899 75870, 80729 06623.