உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்

இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்

கோவை; அபுதாபியில் இருந்து நேற்று மதியம் 1:00 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு இன்டிகோ விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.சோதனையில் ஐந்து பயணிகள் தங்களது உடமைகளில் இ-சிகரெட் வெளிநாட்டு சிகரெட்கள், லேப்டாப்களை மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது.இதையடுத்து அவர்களிடம் இருந்து, ரூ.28.50 லட்சம் மதிப்பிலான, 1,425 வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், 138 இ-சிகரெட்கள், ஆறு லேப்டாப்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை