மழைநீர் வடிகால் பணிக்கு பூமி பூஜை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியில் மழைநீர் வடிகால் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இதற்கு மாற்றாக, புதிய மழைநீர் வடிகால் கட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து, 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் நகராட்சி துணை தலைவர் விஜயகுமார், நகர நிர்வாகிகள் அருணாச்சலம், கனகு, ராஜ்கபூர் மற்றும் பலர் பங்கேற்றனர்.