மேலும் செய்திகள்
பைக் - லாரி மோதல் இரு வாலிபர்கள் பலி
22-Dec-2024
பாலக்காடு: பாலக்காடு அருகே, ஆட்டோ மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், பாம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராமன், 67. இவர், பாலக்காடு - -குருவாயூர் ரோட்டில், மனைவி சரோஜினி உடன் நேற்று காலை, 7:30 மணிக்கு, ஸ்கூட்டரில் பாலக்காடு நோக்கி வந்தார்.அப்போது, லக்கிடி என்ற இடத்தில் எதிரில் வந்த ஆட்டோ மோதியது. இதில், தலையில் அடிபட்ட ராமன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.சிறு காயங்களுடன் தப்பிய சரோஜினியை அப்பகுதி மக்கள் மீட்டு, பாலக்காடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து, மங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
22-Dec-2024