உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் ஊழியர் இறப்புக்கு காரணமான ஒப்பந்த ஊழியர் தற்கொலை

மின் ஊழியர் இறப்புக்கு காரணமான ஒப்பந்த ஊழியர் தற்கொலை

அன்னுார்:மேட்டூரை சேர்ந்தவர் செங்கோட்டையன், 36. இவர் அன்னுார் வடக்கு மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேன் ஆக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு நவ. 6ம் தேதி அன்னுாரில், சத்தி ரோட்டில், தாலுகா ஆபிஸ் அருகே, மின் கம்பத்தில் ஏறி பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தபோது, திடீரென மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே இறந்தார். இதுகுறித்து அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சத்தி ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர், குன்னத்துாராம்பாளையம், சிவசாமி, 40. என்பவர் தவறுதலாக ட்ரான்ஸ்பார்மரை 'ஆன' செய்தது தெரிய வந்தது. இதனால் மின்சாரம் தாக்கி செங்கோட்டையன் இறந்துள்ளார். போலீசார் சிவசாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.சிவசாமி கடந்த 24ம் தேதி சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். நேற்று அதிகாலையில் குன்னத்துாராம்பாளையம் வீட்டில் துாக்கு மாட்டி இறந்து கிடந்தார். அவரது அறையிலும், அவரது உடலிலும் சாணி பவுடர் சிதறி கிடந்தது.இது குறித்து போலீசார் கூறுகையில், 'முன்னதாக சாணி பவுடர் அருந்தி தற்கொலைக்கு முயன்று, அதன் பிறகு துாக்கு மாட்டி இறந்திருக்கலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ