தேயிலை தோட்டத்தில் யானை இறப்பு
வால்பாறை; தேயிலை தோட்டத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்த யானையை, வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர்.வால்பாறை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில், மானாம்பள்ளி வனச்சரக களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்குள்ள தேயிலை எட்டாம் நெம்பர் தேயிலை தோட்டத்தில், ஏழு வயது பெண் யானை மர்மான முறையில் இறந்து கிடப்பது கண்டறிந்தனர்.இதனையடுத்து உதவி வனப்பாதுகாவலர் பிரியதர்ஷினி தலைமையில், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன், வனவர் முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில், கால்நடை மருத்துவர் விஜயராகவன், வனகால்நடை மருத்துவர் சுகுமார் ஆகியோர், இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தனர்.மானாம்பள்ளி வனச்சரகத்தில், கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு யானைகள் இறந்தது, இயற்கை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு உடல் ரீதியாக பிரச்னை உள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஆய்வு முடிந்த பின் யானை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்' என்றனர்.