கோவில் வளாகத்தில் காலி மது பாட்டில்கள்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு எல்லை ஓரம் அமைந்துள்ள, ஆத்து பத்திரகாளியம்மன் கோவில் முறையான பராமரிப்பின்றி நீண்ட நாட்களாக உள்ளது. கோவில் கோபுரத்தின் மீது செடிகள் முளைத்தும், கோவில் பொலிவு இழந்தும் காணப்படுகிறது.மேலும், கோவிலின் முன்புறம் அதிகளவு செடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த இடம் தற்போது மது அருந்தும் பகுதியாக மாறி வருகிறது.கோவில் வளாகத்தின் முன், மதிய நேரத்தில் ஏராளமானோர் அமர்ந்து மது அருந்திவிட்டு, காலி மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், உணவு பொட்டலங்கள் விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தி, பொதுமக்கள் வந்து செல்ல முறையாக பாதை அமைத்து, சமூக விரோத செயல்கள் நடக்காத வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.