உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பு டீ ஹவுஸ் கடைக்கு வச்சாச்சு சீல்

ஆக்கிரமிப்பு டீ ஹவுஸ் கடைக்கு வச்சாச்சு சீல்

கோவை, ;ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த, டீ ஹவுஸ் கடையை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், வார்டு சுகாதார அலுவலகம் அருகே உள்ள இடத்தில், தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் இண்டஸ்ட்டிரியல் கோ-ஆப்ரேட்டிவ் நிர்வாகத்தினர், 225 சதுரடியில் டீ ஹவுஸ் நடத்த, மாநகராட்சி அனுமதி அளித்தது.ஆனால், ஒதுக்கீடு இடம் தவிர, சுற்றிலும் டேபிள், சேர் போட்டு இடத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்துவந்தனர். கடை நடத்துவதற்கான உரிமம் முடிந்து, இரு வாரங்களுக்கு மேலான நிலையில் ஆக்கிரமிப்பு காரணமாக, பாதசாரிகள் சிரமங்களை சந்தித்து வந்தனர்.இதுகுறித்து நமது நாளிதழில், கடந்த, 19ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று மாலை, கடையை பூட்டி சீல் வைத்தனர். கடையும் அகற்றப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை