ரோட்டை நெருங்கும் ஆக்கிரமிப்பு கடைகள்
கிணத்துக்கடவு, ; பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. அதற்கேற்ப, ரோட்டின் இரு புறமும் கடைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ரோட்டிற்கும், கடைக்கும் உள்ள இடைவெளி அதிகமாகவும், வாகனங்கள் பார்க்கிங் செய்ய வகையிலும் இடம் இருந்தது. ஆனால், தற்போது ஒரு சில பகுதிகளில் அமைந்திருக்கும் கடைகள் முன் பகுதியில், சிறிது சிறிதாக கடையை விரிவுபடுத்தி, தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் அருகே வரை வந்து விட்டனர்.இதனால், வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மஞ்சள் கோட்டை தாண்டி 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. மற்ற வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரோட்டோரம் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரோட்டில் பார்க்கிங் செய்யும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.