| ADDED : நவ 18, 2025 04:40 AM
கோவை: கோவையில் களம் இலக்கிய அமைப்பு சார்பில், 131-வது இலக்கிய சந்திப்பு கூட்டம், சலீவன் வீதியில் உள்ள மாரண்ண கவுடர் பள்ளி அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, புலவர் செந்தாமரை தலைமை வகித்தார். ச ங்க இலக்கியத்தில் மானுட உணர்வுகளும், இயற்கையும் எவ்வாறு கலந்துள்ளது எனவும், சமகால படைப்பிலக்கிய சூழலுக்கு சங்க இலக்கியங்கள் எவ்வாறுஅடித்தளமாக அமைகின்றன என்பது குறித்தும், பேராசிரியர் துரை முருகன் உரையாற்றினார். பிளஸ் 2 வில் தோல்வியடைந்த மாணவன், ஐ.ஏ.எஸ்., தேர்வில் தனது விடா முயற்சியினால் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பது குறித்தும், போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கக் கூடியவர்கள் எத்தகைய முயற்சியை எடுக்க வேண்டும் என்பது குறித்தும், அனுராக் பத்தாக் எழுதிய 'பிளஸ் டூ பெயில்' என்ற நுாலில் இருந்து, விடா முயற்சிதான் வெற்றிக்கு இலக்கு என்ற கருத்தை சுட்டிக்காட்டி, பேராசிரியர் ஸ்ரீமதி கருத்துரை வழங்கினார். களம் அமைப்பாளர்கள், பேராசிரியர் ரவிச்சந்திரன், திறனாய்வாளர் ஜோதிமணி, கவிஞர்கள் அறிவன், அமரநாதன், செந்தில் உள்ளிட்டார் கருத்துரை வழங்கினர்.