இன்ஜினியரிங் பணிகள்: ரயில் இயக்கத்தில் மாற்றம்
கோவை; மதுரை - திண்டுக்கல் இடையேயான ரயில்பாதையில், இன்ஜினியரிங் பணிகள் நடக்க உள்ளதால் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில் - கோவை(16321) இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 26, 27 ம் தேதிகளில் விருதுநகர் - கரூர் மார்க்கமாக, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் செல்லாது.இந்த ரயில், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.