உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் பல்வேறு பகுதிகளில் இ.பி.எஸ். இன்று தேர்தல் பிரசாரம் 

கோவையில் பல்வேறு பகுதிகளில் இ.பி.எஸ். இன்று தேர்தல் பிரசாரம் 

கோவை: அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, இன்று மாலை 4.45 மணிக்கு செல்வபுரம் பகுதியில் ரோடு ஷோ துவக்குகிறார். தொடர்ந்து தொண்டாமுத்துார் மாரியம்மன் கோவில் மைதானத்தில் பேசுகிறார். அங்கிருந்து, ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்துார், கோவைபுதுார் பிரிவு வழியாக குனியமுத்துார் சென்று, பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். பின், ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, வழியாக சுந்தராபுரம் சென்று பேசிய பின், கோதாவாடி பிரிவு செல்கிறார். கட்சியினர் அளிக்கும் வரவேற்புக்கு பின், பொள்ளாச்சியில் தனியார் விடுதியில் இரவு தங்குகிறார். நாளை (செப்., 10) பொள்ளாச்சியில் கலந்துரையாடலை முடித்த பின், ஆனைமலையில் பிரசாரம் செய்கிறார். பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், உடுமலைபேட்டை பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் பேசி விட்டு, உடுமலை காந்திநகரில் தங்குகிறார். செப்., 11ம் தேதி, உடுமலை ஐ.எம்.ஏ., ஹாலில் நடக்கும் கலந்துரையாடலில் பங்கேற்று விட்டு, மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் பேசியபின், தாராபுரம் செல்கிறார். அங்கு பிரசாரம் முடிந்த பின் காங்கேயம் செல்கிறார். அங்கிருந்து புறப்பட்டு, திருப்பூர் வேலம்பாளையத்தில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார். செப்., 12ல் தொழில்துறையினருடன் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து மாலை திருப்பூர் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் முன் பேசுகிறார். பின், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் மாலை பேசுகிறார். அங்கிருந்து புறப்பட்டு, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகில் பொதுமக்களிடம் பேசுகிறார். அன்றிரவு கோவை ஜென்னீஸ் கிளப்பில் தங்குகிறார். செப்., 13ல் ஜென்னீஸ் கிளப்பில் காலை 11க்கு நடக்கும் கலந்துரையாடலில் பங்கேற்கிறார். மாலை 4.45 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அவருக்கு, ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள மால் முன் கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர். ஜி.வி.ரெஸிடென்ஸி பகுதியில் உள்ள, ஆர்.டி.ஓ., மைதானத்தில் மாலை 5.20 மணிக்கு பேசுகிறார். மாலை 6.50 மணிக்கு சூலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பேசுகிறார். அங்கிருந்து புறப்பட்டு, அவிநாசி, சேவூர் ரோடு பகுதியில், இரவு 8.30 மணிக்கு பேசுகிறார். அன்றிரவு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இரவு 10 மணிக்கு சேலம் புறப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை