உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழக்கு போட்டாலும் ஓயாது போராட்டம்!

வழக்கு போட்டாலும் ஓயாது போராட்டம்!

தமிழகத்தில், பொள்ளாச்சி அருகே, கேரள எல்லை பகுதியிலும், ஆனைமலை, நெகமம் சுற்றுப்பகுதியில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கப்படுகிறது. அரசு தடை விதித்தாலும், தடையை மீறி, கள் இறக்கி, தோட்டத்திலேயே விற்பனை செய்கின்றனர்.இதை தடுக்க போலீசார், கள் பறிமுதல் செய்து, விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விவசாயிகளும் விடாமல், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிடுவது, சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பது என, போராட்டம் நடத்துகின்றனர்.எத்தனை வழக்குகள் போட்டாலும், தடைகள் வந்தாலும் கள் இறக்குவோம். எங்களது போராட்டம் ஓயாது என, விவசாயிகள் உரக்க குரல் எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை