மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை!
கோவை; ஆடி மாத காற்று, ஆனியில் துவங்கிய நிலையில், வாரி வீசும் காற்றுக்கு, ஆங்காங்கே மரங்களும் மரக்கிளைகளும் ஒடிந்து விழுகின்றன. இதை தடுக்க எளிதில் உடையாத, பாரம்பரிய நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதே நல்லது என்கின்றனர், இயற்கை ஆர்வலர்கள்.மனிதனுக்குள் இருக்கும் சுவாசக் காற்றை, மாசடையாமல் பார்த்துக் கொள்வது, மரங்கள் நமக்கு செய்யும் பேருதவி. அழகாகவும், வேகமாகவும் வளரும் மரக்கன்றுகளையே பெரும்பாலான மக்கள் நட்டு பராமரிக்கின்றனர்.அழகை கொடுக்கும் மேபிளவர், சில்வர் மேப்பிள், மக்னோலியாஸ் உள்ளிட்ட அலங்கார வகை மரங்கள், காற்றுக்கு எளிதில் சாய்ந்துவிடும். கிளைகளும் உடைந்து விடுகின்றன.இதை தவிர்க்க, மரக்கன்று நட்டு பராமரிப்பதற்கு முன், மரக்கன்றுகளின் தன்மை, பயனை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், இயற்கை ஆர்வலர்கள்.