உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.எஸ்.ஐ., பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்தித்து உற்சாகம்

சி.எஸ்.ஐ., பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்தித்து உற்சாகம்

தொண்டாமுத்தூர்; கோவையில் உள்ள சி. எஸ்.ஐ., உயர்நிலைப் பள்ளியில், 1988---90 ஆண்டு, இயற்பியல் பிரிவில், பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு, ஓணாப்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது.இதில், தமிழகம் மற்றும் அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களில் உயர் பதவி வகித்து வரும், முன்னாள் மாணவர்கள், 27 பேர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில், 1988ம் ஆண்டு, வகுப்பு ஆசிரியராக பணியாற்றிய வால்டர் கிங்ஸ்டன் மறைவிற்கு, மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள், 25 ஆண்டுகளுக்குப்பின் தங்களது நண்பர்களை நேரில் சந்தித்து, ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தனர். அதன்பின் அனைவரும், தங்களின் பள்ளி கால நினைவுகள் மற்றும் தற்போதைய தங்களது வாழ்க்கை குறித்து எடுத்துரைத்தனர்.இசை நிகழ்ச்சிகள், மதிய உணவு நடந்தது. இந்நிகழ்வில், பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர். இறுதியாக, முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அடுத்த சந்திப்பில், அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை