உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் ஆசிரியர்கள்மலரும் நினைவு

முன்னாள் ஆசிரியர்கள்மலரும் நினைவு

கோவை: 'ஓய்வு பெற்று பத்தாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டோம்; இப்போது தான் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது' என்ற முகமலர்ச்சியுடன் நம்மிடம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., ஆசிரியர் பயிற்சி பள்ளியில், 1969-71 ல் படித்த, முன்னாள் மாணவர்கள்.இவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.வகுப்பு தோழர்கள் அனைவரும், அவர்களின் ஆசிரியர் வேலுச்சாமியுடன் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இதில், பங்கேற்ற ஆசிரியர் வேலுச்சாமி கூறியதாவது:கடந்த, 1969- 71ம் ஆண்டு வரை என்னிடம் படித்த மாணவர்கள் இவர்கள். ஆசிரியர் பயிற்சி முடித்து, ஆசிரியர்களாக பணி ஓய்வு பெற்றவர்கள். இந்த சந்திப்பு நிகழ்வில் என்னையும் அழைத்தது பெருமிதமாக உள்ளது. இன்று சந்திப்பில் என் மாணவர்கள் அனைவருக்கும், 70 வயதை கடந்து விட்டனர். நான், 90 வயதை நெருங்கிக்கொண்டு இருக்கிறேன்.தற்போது, இருக்கும் இளம் வயதினர் மிகவும் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுதான். எண்ணங்களை நேர்மறையாக வைத்துக்கொள்ளவேண்டும். இன்றைய மாணவர்களுக்கு நேர மேலாண்மை மற்றும் நிதி மேலாண்மையை கற்றுக்கொடுக்கவேண்டியது அவசியம்.பணத்தின் மதிப்பும், நேரத்தின் மதிப்பும் தற்போதைய பிள்ளைகளுக்கு தெரிவதில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை