உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்களுக்கான பிரத்யேக ஆடை, ஆபரண கண்காட்சி

பெண்களுக்கான பிரத்யேக ஆடை, ஆபரண கண்காட்சி

கோவை : பண்டிகை காலத்தை முன்னிட்டு, கோவை ரெசிடென்சி ஓட்டலில், தனித்துவமான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி நேற்று துவங்கியது; இன்று நிறைவுபெறுகிறது. கோவையை சேர்ந்த தத்வ்வா டைமண்ட்ஸ், 40 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்டது. பல்வேறு வகையான வைரம், தங்கம், போல்கி மற்றும் ரத்தின நகைகளுக்கு, இந்நிறுவனம் புகழ்பெற்றது.தத்வ்வா டைமண்ட்ஸ் இணை நிறுவனர் கரண் பாரக் மற்றும் டிசைனர் சப்னா ரங்கா கூறுகையில், '' கோவையில், தத்வ்வா டைமண்ட்ஸ் ஷோரூம், லட்சுமி காம்ப்ளக்ஸில் அமைந்துள்ளது. வாசன்சி பிராண்ட் கோவைக்கு வருவது, இதுவே முதல்முறை என்பதால், இக்கண்காட்சியில், பல பொருட்களுக்கு, 20-30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பாரம்பரிய ஆடைகள் மற்றும் அணிகலன்களை விரும்புபவர்களுக்கு, இக்கண்காட்சி சரியான தேர்வு,'' என்றார். பார்வையாளர்கள், காலை, 10:00 முதல் 8:00 மணி வரை பங்கேற்கலாம். துவக்கவிழா நிகழ்வில், டாக்டர் ஆதித்யன் குகன், டிசைனர் சங்கீதா பீட்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை