உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரைமட்ட பாலத்தை உயர்த்த எதிர்பார்ப்பு

தரைமட்ட பாலத்தை உயர்த்த எதிர்பார்ப்பு

வால்பாறை;வால்பாறையில், தரை மட்டப்பாலத்தை உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், பல்வேறு இடங்களில் தரை மட்டப்பாலம் உயர்த்தப்படாமல் உள்ளது. சுற்றுலா பகுதியான வால்பாறையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில், பல்வேறு இடங்களில் தரைமட்ட பாலம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால், குறுகலான இந்த பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது.எனவே, வால்பாறை - சோலையாறு அணை செல்லும் ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள தரைமட்ட பாலத்தை உயர்த்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை