எமிஸ் பதிவு பணிக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கூடுதல் பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி, ;'ைஹடெக் லேப்' கொண்ட பள்ளிகளில், 'ெஹல்ட்ரான்' நிறுவனம் வாயிலாக கூடுதல் 'எமிஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்' பணியாளர் நியமிக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது, பள்ளிக்கல்வித் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகள் மற்றும் விபரங்கள், 'எமிஸ்' தளத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் வருகைப் பதிவு, மாணவர்களின் எடை, உயரம் விபரம், பெற்றோர் மொபைல்போன் எண் சரிபார்ப்பு, ஆதார், தபால், வங்கி அலுவலக கணக்கு பதிவு, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட 20 வகையான பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.ஆசிரியர்கள், கற்றல்,- கற்பித்தல் பணிகளுக்கு இடையே 'எமிஸ்' பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்கள் வசம், 'எமிஸ்' பதிவுகள் மேற்கொள்ளும் பணி ஒப்படைக்கப்பட்டது.தற்போது, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் கொண்ட மேல்நிலைப் பள்ளிகளில், 'எமிஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்' பணியாளர் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:'ைஹடெக் லேப்' கொண்ட பள்ளிகளில், 'ெஹல்ட்ரான்' நிறுவனம் வாயிலாக 'எமிஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்' பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உண்டான சம்பளத்தை அந்நிறுவனமே வழங்கி வருகிறது.அதேநேரம், ஆய்வக உதவியாளர்களை கொண்டும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், சில பள்ளிகளில், 700க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் இப்பணியை அவர்களால் முழுமையாக மேற்கொள்ள முடிவதில்லை.இதனால், வகுப்பு ஆசிரியரின் 'ஐடி' வாயிலாகவும், 'எமிஸ்' பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பள்ளிகளில் கூடுதலாக 'எமிஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்' பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.