பணி நிரந்தரம் செய்ய எதிர்பார்ப்பு
அன்னுார்; கடந்த 1989-91ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் 91ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். மீண்டும் 96ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டனர். இரு ஆட்சிகளிலும், மாறி, மாறி, பணி நீக்கம் மற்றும் நியமனம் செய்யப்பட்டவர்கள் இறுதியாக கடந்த 2022ல் ஊராட்சிக்கு ஒருவர் வீதம், திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'அரசு வேலை எப்படியும் நிரந்தரமாகும் என்னும் நம்பிக்கையில் வேறு வேலைக்கு செல்லவில்லை. மாத சம்பளமாக 7,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்றனர்.