உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெரியபோது கிராமத்தில் கண் சிகிச்சை முகாம்

பெரியபோது கிராமத்தில் கண் சிகிச்சை முகாம்

ஆனைமலை : ஆனைமலை அருகே, பெரியபோது பகுதியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.ஆனைமலை அருகே, பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.அதில், கண்புரை, கண்நீர் அழுத்த நோய், சர்க்கரை நோயினால் கண் விழித்திரை நோய் பாதிப்பு போன்ற கண் பரிசோதனை நடைபெற்றது.மொத்தம், 15 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.வட்டார மருத்துவ அலுவலர் முகமது யாசர் அராபத், கண் மருத்துவ உதவியாளர் பொன் பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், குழந்தைசாமி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலெக்ஸ், ரூபன், சாமுவேல் ராஜா மற்றும் ஊராட்சி செயலாளர்கள் பாபு, சக்திவேல், ஜீவிதா மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ