மேலும் செய்திகள்
டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி
23-Sep-2025
ஆனைமலை; பொள்ளாச்சி அருகே விபத்தில் விவசாயி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பொள்ளாச்சி, சிங்காநல்லுார் அகிலாண்டபுரத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமாரசாமி,55. இவர் நேற்றுமுன்தினம் அம்பராம்பாளையம் சென்று விட்டு, பைக்கில் ஊருக்கு சென்றார். தனியார் பென்சில் கம்பெனி அருகே லாரியை, திருநெல்வேலியை சேர்ந்த டிரைவர் மரியா செல்வன்,40, என்பவர், பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பின்னோக்கி இயக்கினார். அதில், சிவக்குமாரசாமி வந்த இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது. படுகாயமடைந்த அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
23-Sep-2025