உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேட்டையனை பிடிக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

வேட்டையனை பிடிக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவை,: மனித உயிர்களை காவு வாங்கி, வேளாண் விளை பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டுயானை வேட்டையனை பிடித்து, வனத்தினுள் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கோவை தடாகம், பெ.நா.பாளையம் பகுதிகளில், ஒற்றை காட்டு யானை வேட்டையன் விளைநிலங்களுக்குள் புகுந்து, துவம்சம் செய்கிறது. வீடுகளில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது. யானையை, வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி, இடம்மாற்றம் செய்ய, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வனத்துறையிடம் வலியுறுத்தியது.வனத்துறையினர் மறுத்த காரணத்தால், கலெக்டரிடம் புகார் செய்தது. அவரும் தலைமை வனப்பாதுகாவலருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் யானையை பிடிக்க, எந்த நடவடிக்கையும் இது வரை இல்லை.இது குறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''மனித உயிரை கொல்லும் ஒற்றை காட்டு யானையை, சட்டப்படி இடமாற்றம் செய்ய மறுப்பதன் காரணத்தை, வனத்துறை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கிறது. அதனால் ஐகோர்ட் தாமாக முன்வந்து, பொது நலன் சார்ந்த இந்த மனுவை விசாரித்து, மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும்,'' என்று வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை