உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடை சுகாதார முகாம் விவசாயிகள் பயன்பெறலாம்

கால்நடை சுகாதார முகாம் விவசாயிகள் பயன்பெறலாம்

கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக, நடப்பு நிதியாண்டுக்கான, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், நடத்தப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், முகாம்கள் துவங்கியுள்ளன.13 ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளிலும், ஒன்றியத்துக்கு தலா, 12 முகாம்கள் வீதம், மொத்தம், 156 முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாமில், நோய் பாதித்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும், குடற்புழு நீக்கம், தடுப்பூசி செலுத்தப்படும், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை, கருப்பை மருத்துவ உதவி உள்ளிட்ட நோய் தடுப்பு மற்றும் தீர்க்கும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்ட கால்நடை வளர்ப்போர், அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி, கூடுதல் விபரங்கள் பெறலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை