மேலும் செய்திகள்
கொடி கம்பங்களால் சாலையோரங்கள் சேதம்
2 minutes ago
உடுமலை: பி.ஏ.பி., பாசன திட்ட செயல்பாடுகள் குறித்து, மத்திய அரசின் 'ஜல்சக்தி' துறை அதிகாரிகள் குழுவினர், திருமூர்த்தி அணையில் நேரடி ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. திட்டம் வந்து, 60 ஆண்டுகளாகியுள்ள நிலையில், பாசன கட்டுமானங்களை முழுமையாக புனரைமக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து விவசாயிகள் தொடர் கோரிக்கை அடிப்படையில், திட்டத்தை முழுமையாக புதுப்பிக்க, ரூ.4,500 கோடி ரூபாயில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேவையான நிதி கோரி, மத்திய அரசுக்கும் மனு அனுப்பியுள்ளனர். இதையொட்டி, மத்திய அரசின், 'ஜல்சக்தி' துறையைச்சேர்ந்த ரமேஷ், சென்னை சென்டர் வாட்டர் கமிஷன் இயக்குனர் அசோகன் மற்றும் அலுவலர்கள் ஆதித்யா, அஷ்ரப் உள்ளிட்ட குழுவினர் திருமூர்த்தி அணையில் நேரடி ஆய்வு செய்தனர். அணை, பிரதான, கிளைக்கால்வாய் மற்றும் பாசனத்திட்டத்தின் அனைத்து வகை கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தனர். அவர்களிடம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மழைப்பொழிவின் அளவை பொறுத்து கிடைக்கும் குறைந்த தண்ணீரை கொண்டு நடைபெற்று மண்டல பாசன முறை குறித்து குழுவினரிடம், முன்னாள் பாசன சங்க தலைவர் பரமசிவம் விளக்கமளித்தார். மேலும், காண்டூர், பிரதான, கிளை, பகிர்மானக் கால்வாய்கள் மற்றும் மதகுகளிலுள்ள ஷட்டர்கள் பெரிதும் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் அக்குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
2 minutes ago