உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  போக்சோ வழக்கில் தந்தைக்கு ஆயுள்சிறை

 போக்சோ வழக்கில் தந்தைக்கு ஆயுள்சிறை

கோவை: பெ.நா.பாளையம் பகுதியை சேர்ந்த, 55 வயது கூலித்தொழிலாளி, மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், மதுபோதையில், தனது 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். தாயாரிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். புகாரின் பேரில், பெ.நா.பாளையம் மகளிர் போலீசார் விசாரித்து, 2022, செப்., 29ல் தந்தையை கைது செய்தனர். அவர் மீது, கோவை முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தந்தைக்கு ஆயுள்சிறை, ரூ.15,000 அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை