விபத்துக்கு வழி வகுக்கும் மெகா பள்ளத்தால் அச்சம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரே, புது பஸ் ஸ்டாண்ட் கட்டும் இடம் அருகே, ரோட்டின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், விபத்துக்கு வழிவகுக்கிறது.வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'ரோட்டின் நடுவே பெரிய பள்ளம் உள்ளதால், அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. பள்ளம் இருப்பதை கவனித்து வாகனங்கள் ஒதுங்கி செல்ல முற்படும் போது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.இருசக்கர வாகன ஓட்டுநர்கள், பள்ளத்தை கவனிக்காமல் வந்தால், தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள் பழுதடைகின்றன.அதிகளவு வாகனங்கள் சென்றுவரக்கூடிய முக்கிய சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இந்த ரோட்டில் கார் ேஷாரூம்கள் அமைந்துள்ளதால், கனரக வாகனங்களை ரோட்டின் குறுக்காக நிறுத்தி, கார்களை இறக்குவதால், போக்குவரத்து ஸ்தம்பித்து, விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, கூறினர்.