உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாஜி அமைச்சர் மீதான வழக்கு பெண் போலீஸ் அதிகாரி ஆஜர்

மாஜி அமைச்சர் மீதான வழக்கு பெண் போலீஸ் அதிகாரி ஆஜர்

கோவை, : தி.மு.க., மாஜி அமைச்சர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரி கோர்ட்டில் ஆஜரானார். கோவை, சிங்கநால்லுாரில் வசித்து வருபவர் பொங்கலுார் பழனிச்சாமி. தி.மு.க., ஆட்சி காலத்தில், 2006- 2011 வரை அமைச்சர் பொறுப்பில் இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்சம் ரூபாய்க்கு சொத்து குவித்ததாக, இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பழனிச்சாமி தரப்பில் அவரது வக்கீல் பி.ஆர்.அருள்மொழி ஆஜரானார்.இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி சண்முகபிரியாவிடம் குறுக்கு விசாரணை செய்ய, எதிர் தரப்பினர் மனு அளித்தனர். கோர்ட்டில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.சென்னையில் எஸ்.பி., அந்தஸ்தில் பணியாற்றி வரும் சண்முகபிரியா, நேற்று கோர்ட்டில் ஆஜரானார். ஆனால், நீதிபதி விடுப்பு காரணமாக விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை