சிலிண்டரில் பிடித்த தீ
சூலுார், ; நீலம்பூர் அருகே சிலிண்டரில் பிடித்த தீயை, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சூலுார் அடுத்த நீலம்பூர் சிவசாமி நகர் பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு, தொழிலாளர்கள் சமைத்து கொண்டிருந்தனர். அப்போது, சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பிடித்தது.உடனடியாக சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சிலிண்டரில் பிடித்த தீயை அடைத்தனர். இதனால், பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் நிம்மதி அடைத்தனர்.