மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025
--- 'கட்டுப்பாடு கூடாது' ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கப்படுகிறது. அதற்கு கட்டுப்பாடு விதிப்பது தேவையற்றது. விதிமீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்றால் எத்தனை பேர் மீது எடுக்க முடியும்? கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டும். - ரவிக்குமார் சூலூர்.'பசுமை பட்டாசு ஓகே' சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, பசுமை பட்டாசு வெடிக்கலாம். அதிக ஒலி, ஒளி எழுப்பும் பட்டாசு தவிர்ப்பது நல்லது. சுற்றுச்சூழல், மாசு, விலங்குகள் குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, கால்நடைகள் பாதிக்காத வகையில் வெடிக்கலாம். - சகாதேவன் பெரியநாயக்கன்பாளையம்.'கட்டுப்பாடு தேவை' பட்டாசு வெடிப்பதை ஒரு சிலர் சுற்றுச்சூழலுக்கு பாதகம் என்கின்றனர். வேறு சிலர் அது நம் பாரம்பரியத்தின் அடையாளம் என்கின்றனர். மருத்துவமனைகள், வன எல்லை, விலங்குகள் பராமரிக்கும் மையம் ஆகியவற்றின் அருகே, பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாம். - கவிரத்னா பெரியநாயக்கன்பாளையம்.'எந்த பாதிப்பும் இல்லை' தீபாவளியன்று ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. நம் பாரம்பரியம், கலாசாரத்துடன் இணைந்து தீய எண்ணங்களை பொசுக்கி, நல்ல எண்ணங்களை மேம்பட செய்ய வேண்டும் என்பதே, இதன் நோக்கம். -காயத்ரி பிள்ளையப்பம்பாளையம்'அச்சமடைந்த மாடுகள்' தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை துவங்கி, மறுநாள் நள்ளிரவு வரை பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் கறவை மாடுகளும் அச்சத்திற்கு உள்ளாகின. குறிப்பிட்ட நேரம் மட்டும் வெடிக்க வேண்டும் என்கிற விதிமுறையை பின்பற்றினால் நல்லது. -திவ்யா கவுண்டம்பாளையம்.
21-Oct-2025