உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூத்துக்குலுங்கும் மலர்கள்

பூத்துக்குலுங்கும் மலர்கள்

வால்பாறை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழைக்கு பின், நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வனப்பகுதியில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. மழைப்பொழிவு குறைந்த நிலையில், எஸ்டேட் பகுதியில் அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்நிலையில் வால்பாறையை சுற்றியுள்ள, பாறைமேடு, அய்யர்பாடி, சின்கோனா, கருமலை, காஞ்சமலை, அக்காமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மஞ்சள் நிற பூக்கள் (வன சூரியகாந்தி பூ) சாலையோரங்களில் பரவலாக பூத்துக்குலுங்குகின்றன. இப்பூக்களை வால்பாறையில் திரண்டுள்ள சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ