உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உணவு பாதுகாப்புத்துறை அழைப்பு

உணவு பாதுகாப்புத்துறை அழைப்பு

கோவை; கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், பேக்கரி உரிமையாளர்களுக்கு விதிமுறைகள், குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம், வரும் 21ம் தேதி நடக்கிறது. உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''இக்கூட்டம், டாடாபாத் பகுதியில் அழகப்பா செட்டியார் சாலையில் உள்ள, பேக்கரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில்காலை, 10:30 முதல் 12:00 மணி வரை நடைபெறும். தவறாமல் பங்கேற்க வேண்டும். அனைவரும் பங்கேற்க வேண்டும். பதிவு சான்றிதழ் இல்லை என்றாலும், புதுப்பிக்க வேண்டும் என்றாலும், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஒத்துழைப்பு அளிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி