உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வன உரிமை சட்ட முதன்மை பயிற்சியாளர்களுக்கான முகாம்

வன உரிமை சட்ட முதன்மை பயிற்சியாளர்களுக்கான முகாம்

கோவை; பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன உரிமை சட்ட முதன்மை பயிற்சியாளர்களுக்கான, மூன்று நாட்கள் சிறப்பு முகாம், தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் நடந்தது.முகாமில் கோவை கலெக்டர் பேசுகையில், ''பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனம் சார்ந்து வாழ்வோருக்கு, அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற வகையில், தமிழக அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பயிற்சி பெற உள்ள களப்பணியாளர்கள் முழுவதுமாக தெளிந்து, அறிந்து, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை பேசுகையில், ''வன உரிமை சட்டத்தை, முறையாகவும், நிறைவாகவும் அமல்படுத்த வேண்டும் என்றால், வன உரிமை சட்டத்தின் படி ஏற்படுத்தப்பட்டுள்ள கிராம சபை, வலுவாக இருந்தால் மட்டுமே முடியும். அதிகமான பொறுப்பும், கடமையும், இந்த கிராம சபைக்கு உண்டு. கிராம சபையில் இருக்கக் கூடிய வன உரிமை குழுக்களுக்கு, தெளிவான புரிதல் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த பயிற்சி வழங்கப்படுகிறது,'' என்றார்.வன உரிமை ஆராய்ச்சியாளர் பிஜாய், வன உரிமை சட்ட மாநில அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி