உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க.,வின் அடிமைகளான கூட்டணி கட்சிகள்: முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆவேசம்

தி.மு.க.,வின் அடிமைகளான கூட்டணி கட்சிகள்: முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆவேசம்

- நிருபர் குழு -கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து நேற்று, பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில், பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் ஆண்ட்ரோ, மருமகள் மார்லினா தம்பதியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தி.மு.க., அரசை கண்டித்தும், அ.தி.மு.க.,வினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமை வகித்து பேசியதாவது:கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பட்டியலின் பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில், பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., மகன், மருமகளை தி.மு.க., அரசு பெயரளவில் கைது செய்துள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தி.மு.க., ஆட்சியில் எவருக்குமே பாதுகாப்பு கிடையாது. போலீசாரின் 'கைகள்' கட்டப்பட்டுள்ளது. போலீசார் சுதந்திரமாக பணிபுரிய தி.மு.க, அரசு விடுவதில்லை.அ.தி.மு.க., ஆட்சியின்போது, யார் தவறு செய்தாலும் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்திற்கு எதிராக கனிமொழி, உதயநிதி ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவர்கள் வாய் திறப்பதில்லை. தி.மு.க., வுடன் உள்ள கூட்டணி கட்சிகள் அனைத்தும் அடிமையாவே உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் தாமோதரன், அமுல்கந்தசாமி, கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உடுமலை

உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, அ.தி.மு.க., திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க., அரசைக்கண்டித்தும், கள்ளக்குறிச்சியில் பட்டியலின மாணவி மீது வன்கொடுமை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள், நடராஜன், ஹக்கீம், சிவாச்சலம், சுரேஷ், அன்பர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதே போல், திருப்பூர் புற நகர் கிழக்கு மாவட்டம் சார்பில், கொமரலிங்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., மகேந்திரன் தலைமை வகித்தார். இதில், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை