| ADDED : டிச 28, 2025 05:04 AM
கோவை, தெற்கு உக்கடம், புல்லுக்காடு பகுதியில் பெரியகடை வீதி போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த செல்வபுரம், ரங்கசாமி காலனியை சேர்ந்த முகமது அப்துல்லாவை, 43, பிடித்து விசாரித்தனர். அவரை சோதனையிட்டபோது, 1.150 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். ரத்தினபுரி ரூட்ஸ் பாலம் அருகே ரயில்வே டிராக் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கூடியிருந்த ரத்தினபுரி மாதவன் வீதியை சேர்ந்த கார்த்திக்,25, சங்கனுாரை சேர்ந்த சூர்யா ரஞ்சன் சர்மா, 25, ரத்தினபுரி தாசப்பன் வீதியை சேர்ந்த ராம்குமார், 25 ஆகியோரை பிடித்து ரத்தினபுரி போலீசார் விசாரித்தனர். அப்போது, 522 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.