உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு வழிச்சாலை பணிகள்; உ.பி. ராஜ்யசபா எம்.பி. ஆய்வு

நான்கு வழிச்சாலை பணிகள்; உ.பி. ராஜ்யசபா எம்.பி. ஆய்வு

பொள்ளாச்சி : மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி - திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறது.மொத்தம், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி - மடத்துக்குளம், 50.07 கி.மீ., மடத்துக்குளம் - ஒட்டன்சத்திரம், 45.38 கி.மீ., மற்றும் ஒட்டன்சத்திரம் - கமலாபுரம், 36.51 கி.மீ., என, 131.96 கி.மீ., துாரத்துக்கு இந்த சாலை அமைகிறது.அதில், பொள்ளாச்சி அருகே குரும்பம்பாளையத்தில் நடக்கும் பணிகளை, உத்தரபிரதேச மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய ராஜ்யசபா எம்.பி.,யுமான தினேஷ்சர்மா நேற்று ஆய்வு செய்தார். திட்ட பணிகள் எந்தளவு முடிந்துள்ளது உள்ளிட்ட விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பணிகளை வேகப்படுத்தி, விரைந்து நிறைவு செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ