உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாங்கிய கடனுக்கு பதிலாக பெண்களை காட்டி மோசடி

வாங்கிய கடனுக்கு பதிலாக பெண்களை காட்டி மோசடி

கோவை; திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் லட்சுமணன், 35; பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருநெல்வேலியை சேர்ந்த சூர்யா என்பவர் அறிமுகமானார். அவர், லட்சுமணனிடம் பணம் கடனாக வாங்கி உள்ளார்.அந்த பணத்தை, லட்சுமணன் திரும்பத் தருமாறு கேட்டு வந்தார். அப்போது சூர்யா கோவைக்கு வந்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளார்.லட்சுமணன் நேற்று முன்தினம் கோவைக்கு வந்தார். அவரை, சூர்யா அழைத்துக் கொண்டு பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள, தனது அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சூர்யா, இளம்பெண்களை காண்பித்து அவர்களுடன் தங்கியிருந்து, பணத்தை கழித்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன், அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வருவதை அறிந்த சூர்யா, தனது பங்குதாரர் ஜெபின் என்பவருடன் தப்பி சென்றார். போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டு, விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டு இருந்த, துாத்துக்குடியைச் சேர்ந்த 49 வயது பெண் மற்றும் தேனியைச் சேர்ந்த 30 வயது பெண் ஆகிய இருவரை மீட்டனர்.வழக்கு பதிந்து பெண்கள் இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய ஜெபின், 37, சூர்யா, 33 ஆகியோரை, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ