மேலும் செய்திகள்
கொலை மிரட்டல் கணவர் மீது வழக்கு
05-Jul-2025
கோவை; வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், வீடு வாங்கித்தருவதாக மோசடி செய்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.செல்வபுரம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அருகில், சரண்யா என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.கடைக்கு சித்ரா என்பவர் வந்திருந்த போது, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக, சரண்யா கூறியுள்ளார். சித்ராவின் மகள் மாற்றுத்திறனாளி என்பதால், அவரது பெயரில் வீடு வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய சித்ரா, சரண்யாவின் வங்கி கணக்கிற்கு ரூ. 1.32 லட்சம் அனுப்பி உள்ளார். அதன், பின்னர் வீடு வாங்கி கொடுக்கவில்லை. சித்ரா செயற்பொறியாளர் ஜீவானந்தத்திடம் கேட்டுள்ளார். அப்படி யாருக்கும் வீடு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவித்தார். அப்போது தான், சரண்யா மோசடி செய்தது சித்ராவுக்கு தெரியவந்தது.இதையடுத்து, செயற்பொறியாளர் ஜீவானந்தம் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் சரண்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
05-Jul-2025