உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி

கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி

பொள்ளாச்சி; கோவை, சரவணம்பட்டி கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், இலவச கறவைமாடு வளர்ப்பு பயிற்சி நடக்கவுள்ளது.இப்பயிற்சி, வரும் 8ம் தேதி காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும். இதில், மாடு இனங்கள், வளர்ப்பு முறை, கொட்டகை அமைப்பு, நோய் மேலாண்மை, தடுப்பூசி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.பயிற்சி குறித்த விபரங்களை அறிய, 0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். விவசாயிகள், இந்த பயிற்சியை பயன்படுத்தி, பல்வேறு நடைமுறைகளை கற்றுக்கொண்டால், கால்நடை வளர்ப்பில் பிரச்னைகள், நோய் மேலாண்மையை எதிர்கொள்ள முடியும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை