உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 12ம் ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவில் நாள் தோறும் காலை, 7:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு புஷ்பாபிேஷகம், சிறப்பு அலங்கார வழிபாடு, மாலை, 7:00 மணிக்கு மூலவர் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.வரும், 7ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹார பெருவிழா நடக்கிறது. 8ம் தேதி காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும், மதியம் அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை