உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு: களமிறங்குது அதிவிரைவு படை

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு: களமிறங்குது அதிவிரைவு படை

கோவை: விநாயகர் சதுர்த்தி விழா வரும், 27ம் தேதி நடக்கிறது. கடந்தாண்டு, 712 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்தாண்டுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட நடப்பாண்டு வேறு இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்படாது என, போலீசார் தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஏழு உதவி கமிஷனர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு உதவி கமிஷனருக்கும், தலா நான்கு என்ற விகிதத்தில், 28 அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்தாண்டில் ஒரு சில இடங்களில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அதைக்கருத்தில் கொண்டே இந்தாண்டு அதிவிரைவு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ள னர். அவர்கள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் இரவில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர். அதிவிரைவு படையினர் தவிர, ஆயுதப்படை போலீசாரும் பணியமர்த்தப்படுவர். விழா முடிந்து சிலைகள் கரைக்கப்படும் வரை பாதுகாப்பு பணியில் அவர்கள் ஈடுபடு வர்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை