உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வக்கீலிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்த கும்பல்

வக்கீலிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்த கும்பல்

கோவை; கோவையை சேர்ந்த சரவணன் மனைவி சுகந்தி, 42. இவர், கோவை கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். கோபால புரம், ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸில் இவரது அலுவலகம் உள்ளது. ரஞ்சித் குமார், 30 என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்தார். ரஞ்சித் குமார் தனக்கு பழக்கமான அப்துல் கனி, முகமது ரபிக், அப்துல் வகாப், ஜாகிர் உசைன் ஆகியோரை, சுகந்திக்கு அறிமுகம் செய்துள்ளார். அவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளனர். தங்களிடம் பணம் கொடுத்தால், அதை பங்கு சந்தையில் முதலீடு செய்து, இரட்டிப்பு லாபம் தருவதாக தெரிவித்தனர். இதை நம்பிய சுகந்தி, தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.30 லட்சம் பணத்தை, அப்துல் கனியின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அவர்கள் தெரிவித்தது போல், லாப பணத்தை சுகந்திக்கு தரவில்லை. நீண்ட நாட்கள் ஆகியும் அசல் மற்றும் லாபம் தராததால் சுகந்தி, அப்துல் கனியின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போதும், அவர் பணம் தர மறுத்துள்ளார். சுகந்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் அப்துல் கனி, முகமது ரபிக், அப்துல் வகாப், ஜாகிர் உசைன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை