கருமத்தம்பட்டி நகராட்சிக்கு குப்பை அகற்றும் வாகனம்
கருமத்தம்பட்டி; பவர் கிரிட் கார்ப்பரேஷன் சார்பில், கருமத்தம்பட்டி நகராட்சிக்கு, குப்பை அகற்றும் வாகனம் வழங்கப்பட்டது.கருமத்தம்பட்டியில் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா சார்பில், தங்களது சமுதாய பொறுப்புணர்வு நிதியின் கீழ், கருமத்தம்பட்டி நகராட்சிக்கு குப்பை அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி, நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.பவர் கிரிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார், துணை பொது மேலாளர் சீதா ஆகியோர், நகராட்சி தலைவர் மனோகரன் மற்றும் கமிஷனர் பாரதியிடம் புதிய வாகனத்தை ஒப்படைத்தனர். ஆயிரம் மரக்கன்றுகளையும் வழங்கினர்.நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ''பவர் கிரிட்டின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, பல சமுதாய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவை மாநகரத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணிகளை செய்ய உள்ளோம்,'' என்றார்.