உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு விரிவாக்க பணிக்கு குப்பையால் இடையூறு; இசைப்பள்ளி துவக்க விழா

ரோடு விரிவாக்க பணிக்கு குப்பையால் இடையூறு; இசைப்பள்ளி துவக்க விழா

நெகமம்; நெகமம் -- கப்பளாங்கரை ரோடு விரிவாக்கப் பணியில், கோப்பனூர்புதூர் பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருப்பதால் பணி பாதிக்கப்படுகிறது.நெகமம் --- கப்பளாங்கரை இடையே நெடுஞ்சாலை துறை சார்பில், ரோடு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, கப்பளாங்கரை முதல் நெகமம் வரை, 2.2 கி.மீ.,க்கு 1.5 மீட்டர் அகலத்தில் ரோடு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.இதில், கோப்பனூர்புதூர் பகுதியில் ரோடு அகலப்படுத்தும் இடத்தில், அதிக அளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது. ரோடு பணி மேற்கொள்ளும் இடத்தில், ஜல்லிக்கற்களும் கொட்டப்பட்டுள்ளது. இதனால் ரோடு பணிகள் மேற்கொள் வதில், அப்பகுதியில் சிக்கல் ஏற்படுகிறது.இவ்வழியாக இரவு நேரத்தில் பைக்கில் செல்லும் போது, இப்பகுதியில் குப்பையை வீசி செல்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் இதை கவனித்து, இங்குள்ள குப்பையை அகற்றி, மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள் வசதிக்காக ரோட்டின் அருகாமையில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும். மேலும், ரோடு விரிவாக்க பணி மேற்கொள்ள நெடுஞ்சாலை துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை