மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
21 hour(s) ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
21 hour(s) ago
கோவை : காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறை மைதானத்தில், 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்படுகிறது. ரூ.214.25 கோடியில் வேலைகள் நடக்கின்றன. முதல்வர் 25ம் தேதி திறந்து வைக்க இருப்பதால் வேலை வேகம் பிடித்துள்ளது. ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தவிர, துாய்மை பணியாளர்களும் செடி நடுதல் போன்ற வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். தினமும் மூன்று 'ஷிப்ட்' என ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு வார்டில் இருந்தும், 5 முதல் 10 தூய்மை ஊழியர்கள் இப்படி செம்மொழி பூங்கா வேலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால், நகரம் முழுவதும் குப்பை சேகரிக்கும் வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடு வீடாக செல்லும் ஊழியர்கள் வராததால், மக்கள் பொது இடங்களில் குப்பையை வீசுகின்றனர். சாக்கடை அடைப்பு நீக்கும் வேலையும் பாதிக்கப்பட்டுள்ளது. வழி மறித்து கேட்கும் பொதுமக்களிடம், செம்மொழி பூங்கா வேலைக்கு பல ஊழியர்கள் சென்றுவிட்டதால் தான் உங்கள் தெருக்களுக்கு வர முடியவில்லை என சொல்லக்கூடாது என கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், மக்கள் திட்டினாலும் ஊழியர்கள் மவுனமாக கடந்து செல்கின்றனர். ”20 லட்சம் பேருக்கு மேல் வசிக்கும் ஊரில், நாங்கள் 4,600 ஊழியர்களே இருக்கிறோம். ஏற்கனவே எல்லா தெருக்களையும் 'கவர்' பண்ண முடியாமல் தவிக்கிறோம். இந்த நிலையில், செம்மொழி பூங்காவுக்கு நிறைய பேரை அனுப்பி விட்டதால், நான்கு பேர் செய்யும் வேலையை ஒருவர் பார்க்க வேண்டியிருக்கிறது. குப்பை தேங்குவதை தடுக்க முடியவில்லை” என சில ஊழியர்கள் குமுறலுடன் கூறினர். அதிகாரிகளிடம் கேட்டால், 'ஒவ்வொரு வார்டிலும் போர்டு வைத்து, மொபைல் நம்பர்கள் எழுதி இருப்பதால், பொதுமக்கள் விடாமல் போன் போட்டு திட்டுகின்றனர். நாங்கள் செலுத்தும் வரியில் தானே நீங்கள் சம்பளம் வாங்குகிறீர்கள்; பிறகு ஏன் எங்களை குப்பையில் சாகடிக்கிறீர்கள்? என்று கொதிக்கிறார்கள். மறுபக்கம், 'வாக்கி டாக்கி'யில் பேசும் உயர் அதிகாரிகள், செம்மொழி பூங்காவுக்கு இன்னும் ஏன் ஆட்கள் வரவில்லை? என்று கேட்டு வறுக்கிறார்கள். கடுமையான மன அழுத்தம் உண்டாகிறது' என்கிறார்கள். மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் பொறியியல் பிரிவினர், உதவி கமிஷனர்கள் அனைவரும் பூங்காவில் முகாமிட்டுள்ளதால், கட்டட அனுமதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, மண்டல அலுவலகங்களுக்கு அலையும் மக்களும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் பூபதியிடம் கேட்டபோது, ''இரு இடங்களிலும் பணிகள் தடையின்றி நடக்கும் விதமாக, ஊழியர்களை பிரித்து அனுப்புகிறோம்,'' என்றார்.
21 hour(s) ago
21 hour(s) ago